சம்மாந்துறை பிரதேச சபையின் இப்தார் நிகழ்வு

சம்மாந்துறை பிரதேச சபையினால் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் பிரதேச சபையின் பிரதான கேட்போர் கூடத்தில் நேற்று (2025.03.18) இடம்பெற்றது.

இதில் அம்பாரை பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட், பிரதேச சபைகளின் செயலாளர்கள், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது விசேட மார்க்க சொற்பொழிவையும், துஆப் பிராத்தனையும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் முன்னாள் தலைவர் மௌலவி யூ.எல்.மஹ்ரூப் (மதனி) நிகழ்த்தினார்.